• திரு DN. வடிவேல் கவுண்டர் 1926- ஆம் ஆண்டு பிறந்தார், திரு D. N. வடிவேல் கவுண்டர் சாதாரண மிதிவண்டியில் தம்முடைய வாழ்கையைத் தொட்ங்கினார். பின் தருமபுரியில் வேல்பால் விற்பனை நிலையத்தைத் தொட்ங்கினார். அவரது அயராத உழைப்பின் பயனாக வேல்பால் நிலையம் ஆல் போல் தழைக்தது. தருமபுரி மாவட்ட மக்களால் பால் டிப்போ வடிவேல் என்று அன்போடு அழைக்கபட்டார்
  • 1965- ஆம் நடந்த இடைத்தேர்தல் பெருந்தலைவர் காமராசரரின் வேண்டுகோளை ஏற்று காளை மாட்டுச் சின்னதில் திரு D.N வடிவேல் கவுண்டர் போட்டியிட்டு வென்றார். முன்பின் அரசியலில் ஈடுபடாத ஒருவர், தேர்தலுக்கு முன் எந்த கட்சியிலும் சார்ந்திராதவர். பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதை அறிந்து, அவர் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கை நினைத்து தமிழகம் வியப்பில் ஆழ்ந்தது.
  • தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி தருமபுரி தனி மாவட்டமாக 2.10.1965 – ல் மலர்ந்த வரலாற்றில் திரு D.N. வடிவேல் கவுண்டர் அவர்களுக்கு பெரும்பங்கு உண்டு. அதன்பின் திரு D.N. வடிவேல் கவுண்டர் அவர்களை தகடூரின் தவப்புதல்வன் என மக்கள் இன்றும் போற்றுகின்றார்கள். மற்றும் அவர் ஆற்றிய சாதணைகல் செய்த நல திட்டங்கள் இன்னும் ஏறாலம்.
சமூகப்பணி
  • தமது இயக்க குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு (குறிப்பாக வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும், விளிம்பு நிலை – தாழ்த்தபட்ட மக்களுக்கும்) இலவச சிகிச்சை அளித்து வருகிறார்
பொதுப்பணி
  • அரிமா சங்கத்தின் பொறுப்பாளர் என்கின்ற முறையில் கண்தான முகாம்.
  • கிராமப்புற ஏழை மானவ – மாணவியர்களுக்கு கல்வி உதவிக்தொகை வழங்குதல்.
  • மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற 10-ஆம் மற்றும் +2 மானவ – மாணவியர்களுக்கு ஊக்க தொகை வழங்குதல்.
  • கடந்த 4 ஆண்டுகளாக, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச இருதய பரிசோதனை செய்து தேவையான குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.